News February 28, 2025
டெல்லி அணியின் ஆலோசகராக பீட்டர்சன் நியமனம்

டெல்லி அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் 18வது சீசன் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கெவின் பீட்டர்சனை ஆலோசகராக டெல்லி அணி நியமித்துள்ளது. அவர் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி, பந்து வீச்சு பயிற்சியாளர் முனாப் பட்டேல், ஆகியோருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
Similar News
News March 13, 2026
SPORTS 360°: கால்பந்தில் இந்தியா அபாரம்

*U-17 மகளிர் கால்பந்தில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தியது *உலக பாரா தடகளத்தில் சுமித் அன்டில் 69.25மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார் *உயரம் தாண்டுதல் T44, T42 பிரிவுகளில் பிரவீன் குமார், சைலேஷ் குமார் தங்க பதக்கத்தை வென்றனர் *சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் தருண் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் *இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் இரட்டையரில், யூகி பாம்ப்ரி-கோரன்ஸன் இணை அரையிறுதிக்கு தகுதி
News March 13, 2026
கேஸ் தட்டுப்பாடு என திட்டமிட்டு பரப்பப்படுகிறது: மோடி

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக தவறான தகவல்களை சிலர் திட்டமிட்டு பரப்புவதாக PM மோடி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்களின் உண்மை முகம் மக்களின் முன் அம்பலப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். போரின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது என்றும், இதை எதிர்த்துப் போராட இந்தியா கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
ராசி பலன்கள் (13.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


