News October 9, 2025
தீபாவளி ரேஸில் இளம் நாயகர்களின் படங்கள்

தீபாவளி என்றால் பட்டாசு, வெடி, புத்தாடைகள் தாண்டி திரைப்படங்களுக்கு தனி இடம் இருக்கும். வழக்கமாக ஒரு பெரிய ஹீரோவின் படமாவது வரும். ஆனால் இந்த ஆண்டு இளம் ஹீரோக்களின் படங்கள் மட்டுமே தீபாவளி ரேஸில் வரிசை கட்டி நிற்கின்றன. தீபாவளிக்கு வர உள்ள படங்களின் போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள். எந்த படத்துக்கு நீங்க போக போறீங்கனு கமெண்ட் பண்ணுங்க…
Similar News
News October 9, 2025
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு வேலை: தேஜஸ்வி

பிஹாரில் அரசு வேலையில் இல்லாத குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி கொடுத்துள்ளார். மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்த 20 நாள்களில் அரசு வேலை வழங்கப்படும் எனவும், 20 மாதங்களில் அரசு வேலை செய்யாத குடும்பங்கள் பிஹாரில் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். பிஹாரில் வரும் நவ.6-ம் தேதி சட்டசபை தேர்தல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 9, 2025
பெண்களுக்கு 12 நாள்கள் லீவு… ஏன் தெரியுமா?

மாதத்திற்கு ஒரு நாள் என ஆண்டுக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு வழங்க CM சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அரசு, தனியார் உள்பட தொழில்துறை நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். முன்னதாக, பிஹாரில் 2 நாள்களும், ஒடிசாவில் ஒரு நாளும் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. TN-ல் மகப்பேறு விடுப்பு உள்ள நிலையில், மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுமா?
News October 9, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹7,000 அதிகரித்தது

தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு சற்றும் குறைவில்லாமல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது வெள்ளி விலை. இன்று ஒரே நாளில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹7,000 அதிகரித்துள்ளது. தற்போது, 1 கிராம் வெள்ளி ₹177-க்கும், ஒரு கிலோ ₹1.77 லட்சத்திற்கும் விற்கப்பட்டு வருகிறது. அக்டோபரில் மட்டும் 9 நாள்களில் வெள்ளி கிலோவுக்கு ₹16,000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.