News September 30, 2025
சிம்புவுடன் முன்பே போட்டோஷூட்: கயாது லோஹர்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘STR 49′ படத்தில் கயாது லோஹர் ஹீரோயினாக நடிக்கிறார். ஆனால், இதற்கு முன்பே ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கான போட்டோஷூட்டில் சிம்புவுடன் நட்பு பாராட்டியதாக கயாது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கான பேச்சுவார்த்தையின்போது தன்னை நினைவிருக்கிறதா என சிம்புவிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் ஆம் என பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
நட்புன்னா என்னான்னு தெரியுமா?

8 வயதில், நமது நண்பர்களுக்கு என்ன Gift கொடுத்திருப்போம்? மிஞ்சிப்போனால் பேனா, பென்சில், ரப்பர். ஆனால் சீனாவில் நட்பை வளர்க்க, தாயின் தங்க செயினையே வெட்டி, மாணவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான் 8 வயது சிறுவன். வேடிக்கை என்னவென்றால் ஒரு மாதம் கழித்தே பெற்றோருக்கு இது தெரிந்துள்ளது. பல பேரிடம் கொடுத்ததால், தங்க துண்டுகளை மீட்பது பெரும்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவயதில் நீங்கள் கொடுத்த கிப்ட் எது?
News December 8, 2025
விஜயகாந்தை விட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: TTV

விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால், அது ஆளும் கட்சிக்கு சரியான போட்டியாக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய்காந்த் வருகையால் 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைந்தது, அதைவிட பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் எனவும் கணித்துள்ளார். இப்படி சொல்வதால் தவெகவுடன், அமமுக கூட்டணி அமைக்கும் என்பது உறுதி இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
News December 8, 2025
பிரபல நடிகர் மரணம்.. மனைவி உருக்கம்

‘பிறந்தநாள் வாழ்த்துகள், என் இதயமே’ என மறைந்த கணவர் தர்மேந்திராவை ஹேமமாலினி உருக்கமாக வாழ்த்தியுள்ளார். நீ என்னைவிட்டு சென்று 2 வாரங்களை கடந்த நிலையில், நொறுங்கி போன மனதை மெதுவாக ஒட்டவைத்து வருகிறேன். என்னுடன் எப்போதும் நீ இருப்பாய் என தெரியும். நம் சந்தோஷமான நினைவுகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நம் அழகான நினைவுகளுக்காவும், இரு அழகிய மகள்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என உருகியுள்ளார்.


