News August 27, 2025
தமிழகத்தில் கவனத்தை ஈர்த்த விநாயகர்கள் PHOTOS

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டு அது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவை என்னென்ன, எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். Swipe செய்து பார்க்கவும்.
Similar News
News August 28, 2025
விரைவில் தயாராகும் ‘கேப்டன் பிரபாகரன் 2’

‘கேப்டன் பிரபாகரன் 2’ படத்தை விரைவில் எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சண்முக பாண்டியன் அவரது தந்தை விஜயகாந்தை போலவே இருப்பதால், நடிப்பதால், அவரை வைத்தே 2-ம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆன ‘கேப்டன் பிரபாகரன்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2k கிட்ஸும் அப்படத்தை வெகுவாக ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
News August 28, 2025
மோடி கங்கை நீர், ராகுல் ஊழல் குடும்பம்: பாஜக விமர்சனம்

குஜராத் மாடல் என்பது பொருளாதார மாடல் அல்ல, அது வாக்குறுதிப்படி மாடல் என ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்திருந்தார். இந்நிலையில், இதுபற்றி பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, மோடி கங்கை நீர் போன்று புனிதமானவர், ஆனால் ராகுல் காந்தியின் குடும்பம் ஊழல், பொய்கள் நிறைந்த குடும்பம் என சாடினார். சோனியா காந்தி, ராபர்ட் வதேரா, ராகுல் ஆகியோர் ஊழல் வழக்கில் ஜாமினில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
News August 28, 2025
ஒரு லட்சம் சேலைகளால் உருவான மெகா கணபதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் சேலைகளை கொண்டு விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். ஒரு லட்சம் சேலைகளை மடித்து அடுக்கி 111 அடி உயர சிலை வடிவமைத்துள்ளனர். இந்த விநாயகரின் பெயர் ‘சுந்தர வஸ்தர மகா கணபதி’. சேலைகளை சூரத், தமிழகம், மேற்கு வங்கத்தில் இருந்து பெற்றுள்ளனர். வழக்கமாக விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைப்பார்கள். இங்கு சேலைகளை பக்தர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர்.