News September 18, 2025

கலர்புல்லாக மாறப்போகும் வேட்பாளர்களின் போட்டோஸ்

image

பிஹார் சட்டமன்ற தேர்தல் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் கலர் போட்டோஸ் இடம்பெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இனி வரும் எல்லா மாநில தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட உள்ளதாம். இதனால் வாக்களிக்கும்போது வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் வாக்காளர்களுக்கு சிரமம் இருக்காது என ECI தெரிவித்துள்ளது.

Similar News

News March 6, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,280 குறைந்தது

image

தங்கம் விலை இன்றும் (மார்ச் 6) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹160 குறைந்து ₹14,960-க்கும், 1 சவரன் ₹1,280 குறைந்து ₹1,19,680-க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹6,520 குறைந்து பொதுமக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை குறைவதால் வரும் நாள்களிலும் விலை குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News March 6, 2026

இது ரொம்ப லேட்.. ஈரானை சாடிய டிரம்ப்!

image

நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், பேச்சுவார்த்தைக்கு ஈரான் அழைப்பதாகவும் ஆனால், இது தாமதமானது என US அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். தற்போது முன்பை விட அதிகமாக சண்டையிட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், டிரம்ப் கருத்தை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் மறுத்துள்ளார். ராணுவ தாக்குதல் என்ற Plan A தோற்றுவிட்டது; தற்போது அவர்களின் Plan B-யும் தோற்றுபோகும் என சாடியுள்ளார்.

News March 6, 2026

இந்த பரிசோதனையை கண்டிப்பாக எடுங்க..

image

ரத்தம் தொடர்பான நோய் பாதிப்புகளை பற்றி அறிய CBC(Complete blood count) டெஸ்ட் எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். நோய்த்தொற்றுகள், ரத்த சோகை & புற்றுநோய்கள் போன்ற நோய்களை கண்டறிய இந்த டெஸ்ட் உதவுமாம். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை கண்டறிய உதவுமாம். குறிப்பாக, காய்ச்சல், சோர்வு போன்ற பிரச்னைகள் நீண்ட நாள்களாக தொடர்ந்தால் CBC டெஸ்ட் எடுப்பது நல்லது என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

error: Content is protected !!