News November 19, 2024

Photo: கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

image

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 3 தினங்களாக நடந்த சோதனையில் ₹12.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வரி ஏய்ப்பு தொடர்பான குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, வங்கிகளில் உள்ள ₹6.42 கோடி டெபாசிட்டுகளும் முடக்கப்பட்டுள்ளது. தலை சுற்ற வைக்கும் வகையில் 500 ரூபாய் நோட்டுகளை மலைபோல் அடிக்கிவைக்கப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது.

Similar News

News November 19, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) எல்நினோ என்பதன் தமிழாக்கம் என்ன? 2) RPU என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவில் வரதட்சணை தடைச் சட்டம் எந்தாண்டு நிறைவேற்றப்பட்டது? 4) நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் கருவி எது? 5) எலியின் அறிவியல் பெயர் என்ன? 6) ‘திரவிடத்தாய்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? 7) புகையும் கந்தக அமிலம் எது? 8) சீன நாணயத்தின் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 19, 2024

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

image

திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக தூத்துக்குடி, நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்கனவே இன்று(நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 19, 2024

பங்கு முதலீடு Vs கடனீட்டுப் பத்திரங்கள்

image

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி, விற்பனை செய்வதை பங்கு முதலீடு (சமபங்கு) எனக் கூறலாம். பத்திரங்களின் வழியே முதலீட்டாளர்கள் மூலதனத்தை அளிப்பதை கடனீட்டுப் பத்திரங்கள் (கடன் மூலதனம்) என்று குறிப்பிடலாம். பங்குகளில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் ஈவுத்தொகை வழங்கப்படும். கடனீட்டுப் பத்திரங்களுக்கு நஷ்டத்திலும் வட்டி வழங்கப்படும். இதை பங்குகளாகவும் மாற்ற முடியும்.