News October 14, 2024

PhonePe: ஒரே மாதத்தில் 722 கோடி பரிவர்த்தனைகள்

image

UPI செயலிகளில், PhonePe பரிவர்த்தனைகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. செப். நிலவரப்படி, மின்னணு பரிவர்த்தனைகளில் ₹10.30 லட்சம் கோடி மதிப்பிலான 722 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதன் விளைவாக, அதன் சந்தைப் பங்களிப்பு 49%ஆக உயர்ந்துள்ளது. பரிவர்த்தனை மதிப்பைப் பொறுத்தவரை, PhonePe 48%, GPay 37%, Paytm 7% ஆக உயர்ந்துள்ளன. Navi & CRED செயலி முறையே 14, 12 கோடி பரிவர்த்தனைகளைக் கடந்துள்ளன.

Similar News

News August 25, 2025

ராசி பலன்கள் (25.08.2025)

image

➤ மேஷம் – சோர்வு ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – சாதனை ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – மகிழ்ச்சி ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தடங்கல் ➤ தனுசு – நலம் ➤ மகரம் – களிப்பு ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – மேன்மை.

News August 24, 2025

குட்டி தளபதி பட்டம்… SK மறுப்பு

image

தன்னை குட்டி தளபதி என்று அழைப்பதை சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார். ‘மதராஸி’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ‘கோட்’ படத்தின் துப்பாக்கி பகிரும் காட்சியில் விஜய் சார் எனக்கு ஊக்கமளிப்பதாக உணர்ந்தேன். படம் வெளியான பிறகு பலரும் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் அழைத்தனர். இதை நான் ஏற்கவில்லை. அண்ணன் அண்ணன் தான், தம்பி என்றுமே தம்பி தான் என சிவகார்த்திகேயன் பேச அரங்கம் அதிர்ந்தது.

News August 24, 2025

ஒரு முறை வந்த ஃப்ளூ காய்ச்சல் 6 மாதங்களுக்கு மீண்டும் வராது!

image

மழைக்காலம் என்பதால் பல இடங்களில் ஃப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த அக்டோபரில் பரவத் தொடங்கிய ஃப்ளூ பாதிப்பு, இந்தாண்டு மார்ச் வரையிலும் நீடித்தது. ஒரு முறை வந்த ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு வராது எனக் கூறும் டாக்டர்கள், அதன்பின் அதனுடைய மரபணு முழுமையாக மாற்றம் அடைவதால் மீண்டும் வரலாம் என்கின்றனர். அதனால் ஆண்டுதோறும் தடுப்பூசி அவசியம் என வலியுறுத்துகின்றனர். ஜாக்கிரதை மக்களே!

error: Content is protected !!