News February 19, 2026
PhonePe-ல் ₹5,000.. வெளியான புது அறிவிப்பு

UPI செயலியில் பணப் பரிவர்த்தனை செய்ய பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, விரல்ரேகை, ஃபேஷியல் ரெகக்னிஷன் பயன்படுத்தி பணம் அனுப்பலாம், PIN தேவையில்லை. தற்போது ₹5,000 வரையான தொகைக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை பெற PhonePe ஆப் புரஃபைலில் Manage Payments-ஐ கிளிக் செய்து Biometric Pay ஐகானை Enable செய்யவும். விரைவில் மற்ற நிறுவனங்களும் இதை கொண்டுவரும் எனத் தெரிகிறது.
Similar News
News February 20, 2026
திமுக தொகுதிப் பங்கீடு இதுதானா?

தேமுதிக வருகையால் 30+ தொகுதிகள் என்ற காங்., கோரிக்கையை DMK தலைமை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 165 இடங்களில் களமிறங்குவதற்கு DMK திட்டமிட்டுள்ளதாம். காங்., 25, VCK 7, மதிமுக 5, DMDK 7+1(RS), CPI 6, CPI(M) 6, MNM 4, மமக 3, முஸ்லிம் லீக் 3, கொமதேக 2, SDPI 1, கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, சு.க.முருகவேல் ராஜன் போன்றவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும் DMK திட்டமிட்டுள்ளதாம்.
News February 20, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (பிப்.21) விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதேபோல், பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்கு பிப்.25 அன்று உள்ளூர் விடுமுறையாகும்.
News February 20, 2026
BREAKING: திமுக கூட்டணியில் வெடித்தது மோதல்

புதுச்சேரியில் யார் தலைமையில் கூட்டணி என்பதில் காங்., – திமுக இடையே வெளிப்படையாக மோதல் வெடித்துள்ளது. புதுவை CM வேட்பாளர் திமுகவின் ஜெகத்ரட்சகன் என்று பேச்சு எழுந்த போது, திமுகவுக்கு எதிராக EX CM நாராயணசாமி கொந்தளித்தார். இந்நிலையில், காங்., 18 தொகுதிகளை கேட்டால், நாங்கள் 30 இடங்களையும் கேட்போம் என ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். மேலும், 2021-ல் திமுக தோல்விக்கு காங்கிரஸும் ஒரு முக்கிய காரணம் என்றார்.


