News October 2, 2025
EMI செலுத்தாவிட்டால் போன் லாக்? RBI கவர்னர் விளக்கம்

கடனில் போன் வாங்கிவிட்டு, EMI செலுத்தாமல் இருக்கும் நபர்களின் போனை லாக் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் நன்மை, தீமைகளை ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இதில் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 2, 2025
சோனம் வாங்சுக்கை விடுவிக்க கோரி முர்முவுக்கு கடிதம்

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதற்கு காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் எனக் கூறி, அவர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜோத்பூர் சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முர்மு தலையிட்டு, வாங்சுக்கை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று, அவரது மனைவி கீதாஞ்சலி அங்மோ கடிதம் அனுப்பியுள்ளார்.
News October 2, 2025
மகளிர் உலகக் கோப்பை: கைகுலுக்கல் கிடையாது

மகளிர் ODI உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அக்.5-ல் இந்தியா – பாக்., அணிகள் மோதவுள்ளன. கொழும்புவில் நடக்கவுள்ள இந்த போட்டியின்போது, பாக்., வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க கூடாது என BCCI அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஆசிய கோப்பை தொடரில் ஃபைனல் வரையிலான போட்டிகளில் இரு அணி வீரர்களும் கைகுலுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News October 2, 2025
தவெக ரசிகர் மன்றமாகவே உள்ளது: கார்த்தி சிதம்பரம்

தவெக ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாடுகள் கொண்ட கட்சி அல்ல, அது ஒரு ரசிகர் மன்றமாகவே இன்னும் செயல்படுகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். அதே இடத்தில்தான் அதிமுக பரப்புரையும் நடந்தது என தெரிவித்த அவர், அக்கட்சியில் கட்டுப்பாடுகள் உள்ளதால் தொண்டர்கள் சரியாக இருந்தனர் என்றார். மாநில, மாவட்ட நிர்வாகிகளின் சொல்லுக்கு தொண்டர்கள் கட்டுப்பட வேண்டும், ஆனால் அது தவெகவில் இல்லை எனவும் கூறினார்.