News August 5, 2024
ஒலிம்பிக்கில் 28 பதக்கம் வென்ற பெல்ப்ஸ்

ஒலிம்பிக்கில் தனி நபராக அதிக பதக்கங்களை வென்ற வீரர் என்ற சாதனையை அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் வைத்திருக்கிறார். இதுவரை அவர் மொத்தம் வென்ற ஒலிம்பிக் பதக்கங்களின் எண்ணிக்கை மட்டும் 28 (23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்). குறிப்பாக, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் தொடரில் அவர் 8 தங்கப்பதக்கங்கள் பெற்றார். இந்த இரண்டு சாதனைகளையும் இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
Similar News
News March 13, 2026
புதுச்சேரியில் ரங்கசாமிக்கு 16.. பாஜகவுக்கு 14..!

புதுச்சேரியில் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் NR காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக, லஜக கட்சிகளுக்கு தங்கள் வசமுள்ள தொகுதிகளில் இருந்து பாஜக சீட் ஒதுக்கும் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
அதிமுக + தவெக கூட்டணி.. முடிவை தெரிவித்தார்

விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அதிமுக, தவெக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள், அதிமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
விஜய்க்கு மகன் கொடுத்த அதிர்ச்சி

இனிஷியலை மாற்றி விஜய்க்கு அவரது மகன் ஜேசன் சஞ்சய் அதிர்ச்சி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கீதா விவாகரத்து பிரச்னை புயலை கிளப்பிவரும் நிலையில், தான் இயக்கி வரும் ‘சிக்மா’ படம் குறித்த ஃபைல்ஸில் JASON SANJAY S என்றே அவர் குறிப்பிடுவதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. அம்மா சங்கீதாவின் பெயரையே இனிஷியலாக அவர் வைத்திருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை.


