News May 25, 2024
6ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

நாடு முழுவதும் 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மதியம் 3 மணி வரை 50% அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இறுதி வாக்குப்பதிவு நிலவரம் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது. இதுவரை நாடு முழுவதும் 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1இல் தேர்தல் நடைபெற உள்ளது.
Similar News
News March 5, 2026
கையாலாகாத பொம்மை CM ஸ்டாலின்: EPS

சட்டம் – ஒழுங்கைக் காக்க வேண்டிய CM, ஒரு கையாலாகாத பொம்மை CM-மாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். நாங்குநேரி கொலை சம்பவத்தின் ரத்த ஈரம் காய்வதற்குள் இடைக்காட்டூரில் மற்றொரு கொலை நடந்துள்ளதாக கூறிய அவர், அரசை கண்டு குற்றவாளிகள் பயப்படவில்லை என்றார். மேலும், பட்டியலின மக்கள் பகுதியில் தாக்குதல் நடக்கிறது என்றால், திமுக இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது என்று தானே அர்த்தம் எனவும் கேட்டுள்ளார்.
News March 5, 2026
BREAKING: மேற்குவங்க கவர்னர் திடீர் ராஜினாமா

மேற்குவங்க கவர்னர் பதவியில் இருந்து விலகுவதாக ஆனந்த போஸ் அறிவித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தொடர்ந்து மோதல்போக்கை கடைபிடித்துவந்த அவர், ஓரிரு மாதங்களில் பதவிக் காலம் முடிவடையவிருந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு ஆனந்த போஸ் அனுப்பியுள்ளார். மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கவர்னர் பதவி விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 5, 2026
தங்கம் விலை ₹5,240 குறைந்தது

போர் சூழலுக்கு நடுவிலும் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருவது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,240 குறைந்துள்ளது. மார்ச் 1-ல் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ₹1,20,960-ஆக சரிந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹35,000 சரிந்து ₹2.95 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


