News December 12, 2024
ATMஇல் இருந்து பிஎப் பணம்.. அடுத்த ஆண்டு அமல்

தொழிலாளர் நலன் கருதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செயல்படுத்தப்படுகிறது. இதில் செலுத்தப்படும் பணத்தை எடுக்க பிஎப் அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இதற்கு பதிலாக ATMஇல் இருந்து பிஎப் பணத்தை எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரியில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தவுரா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
கமலுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பு: ரஜினி

கமல்ஹாசனுக்கு மட்டும் சிறப்பு கவனிப்புடன் இளையராஜா பாடல்கள் அமைத்து கொடுத்தாக ரஜினி தெரிவித்துள்ளார். கமல், ரஜினி, விஜயகாந்த் என பலருக்கு ஒரே டைமில் இளையராஜா இசையமைத்துள்ளார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடல்கள் அமைத்து கொடுப்பதாக இளையராஜா சொல்வார், ஆனால் அதில் உண்மையில்லை என்று ரஜினி கூறியுள்ளார். ‘நாயகன்’ பட தென்பாண்டி சீமையிலே பாடலை அவர் பாடினால், அப்போதே ஆயிரம் பேர் அழுதுவிடுவீர்கள் என்றார்.
News September 14, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க

பெற்றோர்களே இந்த விஷயங்களையும் கவனியுங்கள்: *குழந்தைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவை கொடுத்து பழக்கவும் *தண்ணீர் பாட்டிலை ஸ்டீல் (அ) காப்பரில் வாங்கலாம். வாய் சிறிதான பாட்டில் நல்லது. *பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிறன்று முழு நேரத்தையும் குழந்தையுடன் செலவழியுங்கள் *வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது; பாதுகாப்பும் கூட *பிடிக்காத விஷயத்தை செய்ய வற்புறுத்தாதீர்.
News September 14, 2025
நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் : IMD

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த சுழற்சி காரணமாக 16-ம் தேதி வேலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், TV.மலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 17-ம் தேதி 8 மாவட்டங்களிலும், 18-ம் தேதி 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று IMD கூறியுள்ளது. 19-ம் தேதி வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.