News August 21, 2025
PF கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், EPF-லிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்த்தப்படும் (ஏப்ரல் 1, 2025 முதல்) என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ₹8.8 லட்சமாக இருந்தது. இத்தொகை இறந்தவரின் சட்டரீதியான குடும்பத்தினர் / வாரிசுகளிடம் வழங்கப்படும். மேலும், இத்தொகை ஏப்ரல் 1, 2026 முதல் ஆண்டுக்கு 5% என்ற அளவில் உயர்த்தப்படும் எனவும் EPFO அறிவித்துள்ளது.
Similar News
News January 15, 2026
திருப்பூர் இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில், இன்று 15.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News January 15, 2026
பொங்கல் முடிந்து ஊருக்கு திரும்புவோருக்கு அதிர்ச்சி!

குறைவான முன்பதிவு காரணமாக 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதன்படி, வரும் 19-ம் தேதி மாலை 3.30 மணிக்கு தாம்பரம்- கன்னியாகுமரி, 19-ம் தேதி இரவு 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல்- கோவை, 21-ம் தேதி பகல் 12.30 மணிக்கு தாம்பரம் – நாகர்கோவில், 21-ம் தேதி நள்ளிரவு 12.35 மணிக்கு கோவை போத்தனூர் – சென்ட்ரல், 21-ம் தேதி பகல் 1.50 மணிக்கு சென்ட்ரல் – போத்தனூர் ஆகிய ரயில்கள் ரத்தாகியுள்ளன.
News January 15, 2026
ICC விருதை தட்டித்தூக்கிய வீரர்கள்!

டிசம்பர் மாதத்திற்கான ICC-யின் சிறந்த வீரர் விருதை ஆஸி.,யின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் 31 விக்கெட்டுகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சிறந்த வீராங்கனைக்கான விருதை தென்னாப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் லாரா வோல்வார்ட் கைப்பற்றியுள்ளார். கடந்த மாதம் 3 சதங்கள் உட்பட 392 ரன்கள் குவித்து அவர் கவனம் ஈர்த்திருந்தார்.


