News April 19, 2025

PF ஏடிஎம் திட்டம் மே அல்லது ஜூனில் தொடக்கம்

image

PF பணத்தை எடுப்பதற்கு சில நேரங்களில் மிகுந்த சிரமத்தை மாத சம்பளதாரர்கள் அனுபவிக்கின்றனர். அவர்களின் துயரத்தை போக்கும் வகையில், புதிய திட்டத்தை EPF தயாரித்துள்ளது. இதன்கீழ், PF கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம்மில் பயனாளர்கள் அவசரத் தேவைக்கு எடுக்க முடியும். இந்தத் திட்டத்தை வரும் மே மாத கடைசி (அ) ஜூனில் தொடங்க EPF திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை!

image

ராஜ்கமல் நிறுவனம் அடுத்ததாக ரஜினியை வைத்து ‘தலைவர்173’ படத்தை தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், நடிகர்கள் தேர்வு குறித்து ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களுக்காக எந்த காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. யாரேனும் தங்கள் பெயரில் மோசடிகளில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

News November 22, 2025

தமிழகத்தை கண்காணிக்க 15 குழுக்கள்!

image

தமிழக பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. இந்நிலையில், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் IT தற்போதில் இருந்தே கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி IT ஆணையரகம் சார்பில் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 24 மணி நேரமும் பணப்புழக்கத்தை கண்காணிக்கும் என்று IT தெரிவித்துள்ளது.

News November 22, 2025

ஒட்டியாணம் குறித்து சில தகவல்கள்

image

வாரணாசி பட விழாவில், பிரியங்கா சோப்ராவின் ஒட்டியாணம், பண்டைய இந்தியாவின் பாரம்பரியத்தை நினைவூட்டியது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பெண்கள், இடுப்பில் ஓட்டியாணம் அணிந்து வருகின்றனர். பழங்கால கோயில் சிற்பங்களிலும் இதை நாம் பார்த்திருப்போம். ஒட்டியாணம் குறித்து பலரும் அறியாத சில தகவல்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!