News March 20, 2024
பெட்ரோல் விலை ரூ.75ஆக குறைக்கப்படும்- திமுக

மத்தியில் I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்ததும், பெட்ரோல் விலை ரூ.75ஆகவும், டீசல் விலை ரூ.65ஆகவும் குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “பெட்ரோல் ரூ.75ஆகவும், டீசல் ரூ.65ஆகவும் குறைக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்கப்படுகிறது.
Similar News
News November 16, 2025
பிஹார் தோல்வி ஏன்? ஜன் சுராஜ் விளக்கம்

CM நிதிஷ்குமார் அரசு உலக வங்கியிலிருந்து கிடைத்த ₹14,000 கோடி நிதியை தேர்தலில் வெற்றி பெற பயன்படுத்திவிட்டதாக ஜன் சுராஜ் தேசிய தலைவர் உதய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதனை வைத்தே இலவசங்களை அறிவித்ததாகவும், இப்பணம் இல்லை என்றால் NDA தோற்றிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜன் சுராஜ் வாக்காளர்களில் சிலர் RJD ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதென பயந்து NDA-க்கு வாக்களித்ததாகவும் பேசியுள்ளார்.
News November 16, 2025
இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை.. அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை சேர்க்கும் பணிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள், நேற்றுடன் (நவ.15) முடிவடைந்தன. இந்நிலையில், விடுபட்ட தகுதியானவர்களுக்கு டிச.15 முதல் ₹1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, விடுபட்ட நபர்களிடம் இருந்து உரிமைத் தொகைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
News November 16, 2025
RR-ல் இணைவது ஜடேஜா எடுத்த முடிவுதான்

CSK-ல் இருந்து விலகி RR-ல் இணைவது ஜடேஜா எடுத்த முடிவுதான் என அணி உரிமையாளர் மனோஜ் படாலே தெரிவித்துள்ளார். 4 வாரங்களுக்கு முன் ஜடேஜா தன்னை தொடர்பு கொண்டதாகவும், RR அணிக்கு திரும்ப விருப்புகிறேன் என கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்பிறகே அனைத்து வேலைகளும் தொடங்கியதாக அவர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக தோனியின் ஆலோசனைப்படியே ஜட்டு விலகுவதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


