News March 2, 2025

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைந்தது

image

சென்னையில் பெட்ரோல் விலை இன்று ₹100.80ஆக குறைந்துள்ளது. டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ₹92.39ஆக உள்ளது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு லிட்டர் ₹90.50க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் லிட்டர் ₹101.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை சற்று குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News March 12, 2026

பெண்களுக்கு இலவச தையல் மெஷின்: அரசின் சூப்பர் திட்டம்

image

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், TN அரசு பெண்களுக்கு இலவசமாக தையல் மெஷின்களை வழங்குகிறது. இதனை பெற விரும்பும் பெண்கள் 6 மாதம் தையல் பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹72,000-க்கு மிகாமலும், வயது 40-ஐ தாண்டாமலும் இருக்க வேண்டும். முழு தகவல்களை அறிய www.tnsocialwelfare.tn.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். SHARE.

News March 12, 2026

பிரபல இளம் நடிகர் ஹரி முரளி காலமானார்

image

‘ரசிகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாள சினிமாவில் பிரபலமடைந்த நடிகர் ஹரி முரளி(27) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ‘அண்ணன் தம்பி’, ‘பட்டணத்தில் பூதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் VFX கலைஞராகவும் பணிபுரிந்து வந்தார். ஹரி முரளியின் திடீர் மரணம் மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News March 12, 2026

மீண்டும் 100 டாலரை கடந்த கச்சா எண்ணெய்

image

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $100ஐ தாண்டியுள்ளது. போர் தொடங்கிய பிறகு $120ஐ எட்டியிருந்த விலை, பதற்றம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து சமீபத்தில் $89 ஆக குறைந்தது. கச்சா எண்ணெய் பேரல் $130 வரை அதிகரித்தாலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயராது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!