News December 7, 2024
பெட்ரோல் விலை உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் அதிகரித்து ₹101.23ஆக விற்பனையாகிறது. நேற்று லிட்டர் ₹100.80க்கு விற்கப்பட்ட பெட்ரோல் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. டீசல் விலை நேற்று லிட்டர் ₹92.39க்கு விற்பனையான நிலையில் இன்று 42 காசுகள் அதிகரித்து ₹92.81ஆக விற்பனையாகிறது.
Similar News
News March 3, 2026
சந்திர கிரகணம்.. இதை நிச்சயம் செய்ய வேண்டும்!

<<19289388>>சந்திர கிரகணத்தையொட்டி<<>> என்னென்ன செய்ய வேண்டும் என இந்து சாஸ்திரத்தில் ஒரு சில விஷயங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி, கிரகணம் முடிந்து அடுத்த நாள் காலையில் வீட்டை துடைக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கி வந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். பின்னர் பூஜை அறையில் சாமி படத்திற்கு விளக்கேற்றி பூஜை செய்த பின்னரே சமையலறைக்கு சென்று புதிதாக சமைத்து சாப்பிட வேண்டுமாம்.
News March 3, 2026
தொகுதிக்குள் லாரிலாரியாக பரிசை இறக்கும் SP வேலுமணி

தனது கோட்டையாக உள்ள கோவையில் மீண்டும் வெற்றி வாகை சூட வேண்டும் என ’வாரி வழங்கும்’ வேலைகளில் அதிமுக இறங்கியுள்ளது. ஏற்கெனவே ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் பரிசுகளை அதிமுக இறக்கியது. அதன் தொடர்ச்சியாக தனது தொகுதியில் 25,000 ஓட்டுகள் உள்ள SC, ST மக்களுக்கு லாரிகளில் கொண்டுவந்த 200 லி டிரம்களை விநியோகித்து வருகிறாராம் SP வேலுமணி. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News March 3, 2026
BREAKING: தங்கம் விலை ஒரேநாளில் ₹1,560 குறைந்தது

போர் பதற்றம் அதிகரித்த போதிலும், தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹1,560 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹80 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ₹1,480 சரிந்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹15,465-க்கும், 1 சவரன் ₹1,23,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிலோ 3.15 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.


