News December 22, 2024
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சலுகை அடிப்படையில் லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பெட்ரோல் வாங்குவோருக்கு மட்டும் இச்சலுகை வழங்குகிறது. இந்நிலையில், பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 33 காசுகள் குறைத்து ரூ.100.90க்கும், டீசல் விலையை 33 காசுகள் குறைத்து ரூ.92.48க்கும் விற்கின்றன. உங்கள் ஊரில் பெட்ரோல், டீசல் விலை என்ன?
Similar News
News September 5, 2025
அஸ்திவாரத்தை ஆட்டி வைத்த தீர்ப்பு: அமைச்சர் கவலை

TET தேர்வு கட்டாயம் <<17579658>>என்ற தீர்ப்பு,<<>> அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதா, அல்லது தாங்கள் தேர்வுக்கு தயாராவதா என்ற அச்சம் அவர்களிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
News September 5, 2025
மின்னல் வேக இணைய சேவைக்காக சோதனை

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சோதனைகளை நடத்த, தொலைத்தொடர்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது. 6 மாதங்களுக்கு சோதனை நடத்திக்கொள்ள இப்போது அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 10 இடங்களில் ஸ்டார்லிங்கின் மையங்கள் அமைக்கப்பட்டு, மும்பை தலைமையகமாக செயல்படுமாம். சோதனை முயற்சி வெற்றி பெற்றால் இந்தியாவின் இணை சேவை அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 5, 2025
மிலாடி நபி என்றால் என்ன?

இறை தூதர் முகமது நபிகளின் பிறந்தநாளை தான் உலகம் முழுவதிலும் உள்ள மிலாடி நபியாக கொண்டாடுகின்றனர். மிலாடி நபி திருநாளை, மிலாத் உன் நபி என்றும் இஸ்லாமியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில், அவரின் வாழ்க்கை, போதனைகள், நல்லொழுக்கம் ஆகியவற்றை நினைவுகூர்ந்து, தொழுகை செய்து, நல்ல செயல்களைச் செய்கிறார்கள். அன்பும் அமைதியும் பரப்பும் நாள் என்பதால், இது மிகுந்த புனிதமாகக் கருதப்படுகிறது. SHARE IT.