News October 13, 2025
CBI விசாரணை கேட்ட மனுக்கள் மோசடியானவை: TN அரசு

கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணை கேட்ட மனுக்கள் மோசடியானவை என தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. கரூரில் உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வத்திற்கு எதிராக, அவரது மனைவி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். முன்னதாக, இந்த வழக்குகளை தாங்கள் தாக்கல் செய்யவில்லை என SC-ல் இன்று காலை புதிதாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
Similar News
News October 13, 2025
BREAKING: கரூர் துயர வழக்கில் பரபரப்பு திருப்பம்

கரூர் வழக்கில் CBI விசாரணை கோரி SC-ல் தாக்கல் செய்த மனுவில் தெரியாமல் கையொப்பமிட்டதாக மனைவியை இழந்த செல்வராஜ் கூறியுள்ளார். அதேபோல், சிறுவனை இழந்த பெண், தங்களுக்கு தெரியாமல் மோசடியாக வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, CBI விசாரணை கோரி பாதிக்கப்பட்டவர்கள் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் மோசடி என தெரியவந்தால் தீர்ப்பு ரத்தாகவும் வாய்ப்புள்ளதாக திமுக MP வில்சன் கூறியுள்ளார்.
News October 13, 2025
மோசடி என தெரிந்தால், கரூர் தீர்ப்பு ரத்தாக வாய்ப்பு: வில்சன்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அரசு அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை தொடரும் என்று வில்சன் தெரிவித்துள்ளார். SC தற்போதைய ஆணையை மட்டுமே வழங்கி இருக்கிறது; இது இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனக் கூறினார். மேலும், மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது தெரிந்தால், நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
தீபாவளி தீக்காயங்களுக்கு ஒரே போன் கால் போதும்!

பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட மக்களாகிய நாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்நிலையில், தீபாவளி அன்று தீக்காயம் (அ) பிற அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் ‘108’ என்ற ஒரே எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. போன் செய்த அடுத்த சில நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்திற்கு வருவதற்கு ஏற்றார்போல், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.