News April 9, 2025
வக்ஃப் மசோதவுக்கு எதிரான மனுக்கள்.. ஏப்., 15ல் விசாரணை

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 15க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் வரும் 15-ம் தேதி விசாரணை எடுத்துக்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. வக்ஃப் மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் அது சட்டமானது.
Similar News
News April 17, 2025
சூப்பர் நாடாளுமன்றமா உச்ச நீதிமன்றம் ? தன்கர் காட்டம்

உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது என குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அரசமைப்பின் 145வது பிரிவை விளக்குவதுதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை என்றும், அதை மறுத்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 17, 2025
இந்துக்களும் நாமும் ஒன்றல்ல: பாக். ராணுவத் தளபதி

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், மத ரீதியான சர்ச்சை கருத்தை பேசியுள்ளார். வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பேசிய அவர், இந்துக்களிடம் இருந்து நாம் வேறுபட்டவர்கள் எனக் குறிப்பிட்டார். நமது மதம், பழக்கவழக்கம், மரபு உள்ளிட்டவை இந்துக்களிடம் இருந்து வேறுபாடானது எனவும், இதனை தங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் அசிம் வலியுறுத்தினார். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 17, 2025
Health Tips: விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற பருப்புகளுடன் பேரீச்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலில் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். வேர்க்கடலையில் இருக்கும் ஜிங்க், விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறதாம். மேலும், வெங்காயம், பூண்டு இரண்டும் ஆண்மை பெருக்கியாகவும், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியலில் முக்கியமானதாகவும் இருக்கிறதாம். SHARE IT.