News May 7, 2025
திரைப்படமாகும் பெருமாள் முருகன் நாவல்

தமிழின் முன்னணி எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’ நாவல் திரைப்படமாகிறது. ஏற்கெனவே, அவருடைய சேத்துமான், கோடித்துணி கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டு பேசப்பட்டன. இந்நிலையில், ஒடுக்கப்பட்ட சமூக சிறுவர்களின் வாழ்வியலை பேசும் அவருடைய கூளமாதாரி நாவலை புதுமுக இயக்குநர் ராஜ்குமார் இயக்குகிறார். வெள்ளித்திரைக்காக சில மாற்றங்களுடன் எடுக்கப்படும் இப்படத்தில் புதுமுகங்கள் அதிகமாக நடிக்கின்றனர்.
Similar News
News January 6, 2026
முட்டை விலை மளமளவென குறைந்தது

டிசம்பரில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய முட்டை கொள்முதல் விலை, ஜனவரியில் மளமளவென சரியத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 20 காசுகள் குறைந்த நிலையில், இன்று மேலும் 20 காசுகள் சரிந்துள்ளது. நாமக்கல்லில் தற்போது 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்கப்பட்டு வரும் நிலையில், இனி விலை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 6, 2026
செங்கோட்டையன் ஒர் Expired Tablet: வைகைச்செல்வன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஒரு ‘காலாவதியான மாத்திரை’ என EX அமைச்சர் வைகைச்செல்வன் சாடியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்லு, சொல்லு போனவர்களையும், சுகர் மாத்திரை சாப்பிடும் சிலரையும் செங்கோட்டையன் தவெகவில் இணைப்பதால் அக்கட்சிக்கு எவ்வித பலனும் இல்லை என்றார். மேலும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வந்து இணையும் என உறுதிப்பட தெரிவித்தார்.
News January 6, 2026
பட்டா, சிட்டா ஆவணம்.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

ஆவண எழுத்தர் உதவியின்றி நேரடியாக சொத்து உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யலாம் என பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், கூடுதல் செலவுகள் குறையும். சொத்து பத்திரங்களை தயாரிக்க ஆவண எழுத்தர்களையே மக்கள் நாடுகின்றனர். ஆன்லைனில் உள்ள மாதிரி பத்திரங்களின் அடிப்படையில் ஆவணங்களை மக்கள் தயாரித்து கொண்டுவந்தால், அதனை நிராகரிக்காமல் பதிவு செய்யுமாறு சார் பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


