News May 20, 2024
சென்னையில் ஆசிட் வீசிய நபர் கைது

சென்னையில் நேற்று ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஈக்காட்டுதாங்கல் அருகே கணேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் ப்ளாட்பாரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா என்பவர், தனது கையில் வைத்து இருந்த ஆசிட் பாட்டிலை வீசியதில் கணேஷின் 5 வயது மகள் காயமடைந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கிண்டி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ராஜாவை கைது செய்தனர்.
Similar News
News August 16, 2025
இன்றும் தங்கம் விலை குறைந்தது

கடந்த ஒருவாரமாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 குறைந்து ₹74,200-க்கும், கிராமுக்கு ₹5 குறைந்து ₹9,275-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8-ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ₹75,7600-ஆக இருந்த நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் சுமார் ₹1,520 குறைந்துள்ளது.
News August 16, 2025
ஆஸி., கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

ஆஸி., அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், முதல் முழுநேர பயிற்சியாளருமான பாப் சிம்ப்சன் (89) காலமானார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக பணியாற்றிய அவர், ஆஸி.,யின் தலைசிறந்த ஓபனர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவராக இருந்த அவர், முதல் தர கிரிக்கெட்டில் 21,029 ரன்கள் குவித்ததுடன் தனது லெக் ஸ்பின் மூலம் 349 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
News August 16, 2025
ராமதாஸ் வழிகாட்டி மட்டுமே: கே.பாலு

பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு உரிமை இல்லை என ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால், கட்சியின் 34 விதிகளிலும் அப்படியான எதுவும் இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் நிறுவனர் வழிகாட்டி மட்டுமே, அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் பாலு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ராமதாஸின் மனைவி சரஸ்வதி பிறந்தநாளில் தந்தை-மகன் சந்தித்துள்ளனர்.