News June 8, 2024
தீபாவளிக்கு ரிலீசாகும் விடாமுயற்சி?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வரும் விடாமுயற்சி படம், தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 20 முதல் எஞ்சியுள்ள காட்சிகளை ஒரே கட்டமாக எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வரும் சூழலில், படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வது உறுதியானதால் திட்டமிட்டபடி படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Similar News
News August 9, 2025
அந்த ஹீரோ டார்ச்சர் செய்தார்.. தமன்னா பகீர் புகார்

ஷூட்டிங்கில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தமன்னா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரம்ப காலத்தில் நடித்த படத்தின் ஹீரோ, தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்யாதீர்கள் என கெஞ்சியும் அந்த ஹீரோ கேட்கவில்லை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தில் புகார் அளிப்பதாக கூறிய பிறகே அவர் விலகியதாகவும் கூறியுள்ளார். எந்த ஹீரோவாக இருக்கும்?
News August 9, 2025
தூங்கி பல நாள்கள் ஆகிவிட்டது: அன்புமணி

பதவி, பொறுப்புக்கான அவசியமே தனக்கு கிடையாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தான் தூங்கி பல நாள்கள் ஆகிவிட்டதாகவும், மனதில் பாரத்தை சுமந்து வருவதாகவும் தெரிவித்தார். தான் சுயநலவாதி கிடையாது, ஆனால் ராமதாஸை சுற்றியுள்ள குள்ளநரி கூட்டம் ஒருதலைபட்சமாக தான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக அவரிடம் கூறுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
News August 9, 2025
பாமக மெகா கூட்டணி அமைக்கும்: அன்புமணி

பாமக தொண்டர்கள் விருப்பப்படி மெகா கூட்டணி அமைக்கப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், பாமகவுக்கு வழிகாட்டி என்றால் ராமதாஸ் தான் என்றும், அவர் இங்கு இல்லை என்றாலும், அவரது உள்ளம் இங்கு தான் உள்ளதாகவும் கூறினார். வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தால் 40 – 50 MLA-க்களை பெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.