News February 24, 2025
விடாமுயற்சி OTT ரிலீஸ் டேட் அறிவிப்பு!

வரும் மார்ச் 3 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ‘விடாமுயற்சி’ வெளிவர இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கிய படம் பிப். 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் நடித்து லைகா தயாரித்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். சாலை ட்ரிப்பின் போது, மனைவி திடீரென காணாமல் போக, அஜித் அவரை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. யாரெல்லாம் வெயிட்டிங்!
Similar News
News February 24, 2025
கூட்டணி அமைப்பாரா ரஜினி?

ஜெயலலிதாவுடன் பல நேரங்களில் முரண்பட்ட ரஜினிகாந்த், இன்று போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். எப்போதும் பாஜகவுடன் இணக்கம் காட்டும் ரஜினியின் இந்த செயல்பாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த தேர்தலில் பிரிந்த அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் இணைப்பதில் ரஜினி அணிலாக செயல்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
News February 24, 2025
ரோகித் ஷர்மானு சொன்னாலே அதிரும்

இந்திய அணி விளையாடிய கடந்த 21 ஐசிசி தொடர் போட்டிகளில் 20இல் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த அனைத்து போட்டிகளிலும் கேப்டன் யார் தெரியுமா? லெஜண்ட் ரோகித் ஷர்மா. கோலிக்குப் பின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரோகித் ஷர்மா, டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். இதனையடுத்து, தற்போது சாம்பியன்ஸ் டிராபியிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இவரது கேப்டன்சிக்கு உங்களது மார்க் என்ன?
News February 24, 2025
3 நாளில் ₹50 கோடியை வசூலித்த ‘டிராகன்’

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் 3 நாளில் ₹50 Cr வசூல் செய்துள்ளது. ஓபனிங் வார இறுதியில், தமிழகத்தில் மட்டும் ₹24.5 Cr, வெளிமாநிலங்களில் ₹10.62Cr, வெளிநாடுகளில் ₹14.7 கோடியை வசூலித்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த வாரம் ₹100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.