News February 9, 2025
₹100 கோடி கிளப்பில் விடாமுயற்சி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1735904967002_1173-normal-WIFI.webp)
கடந்த 6ம் தேதி வெளியான ‘விடாமுயற்சி’ 3ம் நாளில் உலகளவில் ₹105 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ₹100 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையையும் விடாமுயற்சி படைத்துள்ளது. ஆக்ஷன் மாஸ் ஹீரோவான அஜித்தை மாறுபட்ட கோணத்தில் காட்டிய மகிழ்திருமேனியின் படத்தை நீங்கள் பார்த்து விட்டீர்களா… படம் எப்படி இருக்கு?
Similar News
News February 10, 2025
ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1736334221610_55-normal-WIFI.webp)
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை கடந்த சில நாள்களாக விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநரிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News February 10, 2025
கோலி சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739193457824_1031-normal-WIFI.webp)
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை நியூசி. அணியின் கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சதமடித்ததன்(133 ரன்கள்) மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி 159 போட்டியில் 7 ஆயிரம் ரன்களை எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ஹாசிம் அம்லா (151 போட்டி) உள்ளார்.
News February 10, 2025
வேங்கைவயலில் 21 விசிகவினர் கைது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_92022/1662720797697-normal-WIFI.webp)
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற விசிகவினர் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து வேங்கைவயலுக்குள் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசிகவினர் சிலர் இன்று காவல்துறையின் அனுமதியின்றி உள்ளே நுழைய முயன்றதால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.