News May 5, 2024
மசாலாவில் பூச்சிக்கொல்லி அளவை அதிகரிக்க அனுமதி

மூலிகை & மசாலா பொருள்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவின் அதிகபட்ச வரம்பை 10 மடங்குவரை அதிகரித்துக்கொள்ள FSSAI ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த பொருள்களில் உள்ள எம்.ஆர்.எல்., அளவு, முன்பு கிலோ ஒன்றுக்கு, 0.01 மில்லி கிராமாக இருந்தது. ஆனால் தற்போது, கிலோ ஒன்றுக்கு, 0.1 மில்லி கிராமாக 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 20, 2025
நர்ஸ் நிமிஷா பெயரில் போலி வசூல்: MEA Fact Check

கேரள நர்ஸ் நிமிஷா வழக்கில் மத்திய அரசின் பெயரில் போலியாக வசூல் நடப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏமனில் 2017-ல் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா கடந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிடப்படவிருந்தார். மத்திய அரசின் தலையீட்டால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நிமிஷாவின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களே உஷார்..!
News August 19, 2025
நல்ல தூக்கம் வேண்டுமா..?

*மாலை 4 மணிக்கு மேல் தூங்குவதைத் தவிர்த்திடுங்கள். *தூங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். *தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பிருந்தே கஃபைன் கலந்த பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். *மதியம் 12 மணிக்கு பிறகு டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்திடுங்கள். *மென்மையான இசையை படுக்கை அறையில் ஒலிக்கவிட்டு, உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.
News August 19, 2025
வங்கி கணக்கில் ₹2,000?.. FACT CHECK

PM KISAN திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ₹6,000 மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் ரிஜிஸ்டர் செய்யலாம் எனக் கூறி வாட்ஸ்ஆப்பில் APK ஃபைல் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இது அப்பட்டமான மோசடி எனத் தகவல் வெளியாகியுள்ளது. திட்டம் குறித்த உண்மைத் தன்மையை pmkisan.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஃபைலை டவுன்லோடு செய்து மோசடியில் சிக்க வேண்டாம் மக்களே! SHARE IT