News December 19, 2024
8,997 பணியிடங்களை நிரப்ப அனுமதி

சத்துணவு ஊழியர்கள் காலிப்பணியிடங்களை மொத்தமாக நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் மாதம் ₹3,000 தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுபவர்களில், 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிப்பவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவர். அவர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியமாக மாதம் ₹3,000 – ₹9,000 வழங்கப்படும்.
Similar News
News March 5, 2026
டைம் ஓவர்.. பாதியிலேயே கிளம்பிய ரயில் டிரைவர்

பிஹாரில் ஒரு லோகோ பைலட் தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக ரயிலை பாதியிலேயே நிறுத்திச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மால்டா-சிலிகுரி சென்ற ரயில் நேற்று மதியம் தாக்குர்கஞ்ச் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது லோகோ பைலட் தனது 9 மணி நேர ஷிப்ட் முடிந்துவிட்டதாக கூறி ரயிலை மேலும் இயக்க மறுத்துவிட்டார். இதனால் பயணிகள் 3 மணி நேரம் சிக்கித் தவித்தனர். மேலும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
News March 5, 2026
மாணவர்களுக்கு ₹4,000.. வந்தாச்சு HAPPY NEWS

ஊரகப் பகுதியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு நடத்தி TN அரசு கல்வி உதவித் தொகை (100 மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தலா ₹1,000) வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான தேர்வு முடிவுகள் ஜன.20-ல் வெளியானது. தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் தகுதியை உறுதி செய்த பின் உதவித் தொகை வழங்கப்படும்.
News March 5, 2026
BREAKING: விபத்தில் சிக்கிய இந்திய விமானம்?

அசாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் போர் விமானம் Sukhoi Su-30MKI விபத்தில் சிக்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது. கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட விமானம், மாலை 7 மணியளவில் கர்பி அங்லாங்கில் உள்ள சோகிஹோலா அருகே ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. அது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடும் பணியை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது.


