News April 7, 2024

ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி

image

திருச்சியில் மாற்றுப்பாதையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனப் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி கேட்டு பாஜக சார்பில் தொடரப்பட்ட அவசர மனுவை விசாரித்த நீதிமன்றம், திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகனப் பேரணி நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

Similar News

News March 31, 2026

பல பிரச்னைகளுக்கு PM மோடியே காரணம்: ராகுல்

image

தன்னையும், தனது நிதி நிலையையும் பாதுகாப்பதிலேயே PM மோடி குறியாக உள்ளார் என ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய ரூபாய் வீழ்ச்சி, பங்குச்சந்தை & பொருளாதாரம் சரிவு, வேலையிழப்பு, சிலிண்டர் பிரச்னை ஆகியவற்றுக்கு PM மோடி சமரசம் செய்து கொண்டதே காரணம் என X-ல் ராகுல் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் எதிர்காலத்தை அவர் சரணடைய வைத்துவிட்டார் என்பதை 140 கோடி மக்களும் அறிவார்கள் என்று ராகுல் கூறியுள்ளார்.

News March 31, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 31, பங்குனி 17 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 31, 2026

243 பணியிடங்கள்.. உடனே Apply பண்ணுங்க

image

தேசிய தகவலியல் மையத்தில் 243 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கணினி அறிவியல் & தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல் & செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பணிகளுக்கு B.E/ B.Tech கல்வித்தகுதியுடன், GATE மதிப்பெண் அவசியமாகும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த <>லிங்க்கில்<<>> ஏப்.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். சம்பளமாக ₹56,100 முதல் ₹1,77,500 வரை வழங்கப்படும்.

error: Content is protected !!