News December 31, 2024
சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நேற்றும் இதேபோல அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் போராடிய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News July 11, 2025
2027 ஆகஸ்டில் ஓய்வு.. ஜெகதீப் தன்கர் அறிவிப்பு

2027 ஆகஸ்டில் ஓய்வு பெற இருப்பதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை நிகழ்ச்சியில் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார். முன்னதாக, துணை ஜனாதிபதியாகும் முன்பு மே.வங்க ஆளுநராக தன்கர் பதவி வகித்தார். பின்னர் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக கூட்டணியால் முன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
News July 11, 2025
SK கொடுத்த ஷாக்!

‘குட் நைட்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சந்திரசேகரன் அடுத்து SK படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அதற்கு SK பிரேக் போட்டுள்ளாராம். ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவருக்கு கதை சொல்ல, அதில் பயங்கர இம்ப்ரஸான SK, அந்த படத்தை முதலில் தொடங்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.
News July 11, 2025
மதிமுகவில் ஓயாத மோதல் (1/2)

மல்லை சத்யா மீதான அதிருப்தியால் கட்சி பதவியை துறப்பதாக 3 மாதத்திற்கு முன்பு துரை வைகோ முதலில் அறிவித்ததும், பிறகு 2 பேரையும் வைகோ சமாதானம் செய்ததும் அறிந்ததே. அதன்பிறகு 2 பேர் இடையேயான கருத்து வேறுபாடு குறையவில்லை எனவும், 2 பேரின் ஆதரவாளர்கள் பிரச்னையை ஊதி பெரிதாக்கியதாகவும் கூறப்படுகிறது. 2 பேரையும் இனி சமாதானம் செய்ய முடியாது என வைகோவும் புரிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.