News January 2, 2025
பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து பாமக மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதியளிக்க போலீசார் மறுத்துள்ளனர். முன்னதாக, அதிமுக, நாதகவினர் போராடி கைதானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 4, 2026
டிரம்ப் செய்யும் போது மோடியால் முடியாதா? ஓவைசி

டிரம்ப் வெனிசுலாவில் மேற்கொண்ட நடவடிக்கையைப் போல, PM மோடியும் பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானுக்குள் சென்று மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள், மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு பிடித்து வர வேண்டும் எனவும், டிரம்ப்பால் செய்ய முடியும் போது PM மோடியால் செய்ய முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 4, 2026
இதை செய்தால் குழந்தைகளின் இதயத்துக்கு ஆபத்து!

குழந்தைகள் எப்போதும் போன், லேப்டாப், கேம்ஸ் என இருக்கிறார்களா? இதனால் அவர்களின் இதயம் நாளுக்கு நாள் பலவீனமாகி வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. எப்போதும் Screen முன்பே உட்கார்ந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், கொலஸ்ட்ரால் பிரச்னைகள் அதிகரிக்கிறதாம். இதனால், இதய பிரச்னைகள் வருவதற்கான ரிஸ்க் அதிகமாக இருக்கிறதாம். எனவே உங்கள் குழந்தைகளின் Screen Time-ஐ குறையுங்கள். SHARE.
News January 4, 2026
பண மழை கொட்டும் 3 ராசிகள்

2026 ஜூன் மாதத்தில் குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகிறது. இதனால், இந்த 3 ராசியினரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மிதுனம்: உயர் பதவி கிடைக்கும். முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். *கடகம்: தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். நிதிநிலைமை மேம்படும். *கன்னி: பழைய கடன்கள் தீரும். திருமண தடைகள் அகலும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


