News October 23, 2024
ஷமிக்கு சரியான மாற்று மயங்க்: பிரட் லீ

பார்டர் கவாஸ்கர் டிராபியில் முகமது ஷமி விளையாடவில்லை என்றால், அவருக்கு மாற்றாக மயங்க் யாதவை அணியில் சேர்க்கலாம் என பிரட் லீ பிளேயர் பரிந்துரைத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “IPL தொடரின்போது, இளம் பந்துவீச்சாளரான மயங்க் யாதவின் பவுலிங்கை கவனித்தேன். 157 கிமீ வேகத்தில் அவர் பந்து வீசினார். 150kmph+ வேகத்தில் தன்னை நோக்கி வரும் அதிவேக பந்துவீச்சை எந்த பேட்ஸ்மேனும் சமாளிக்க முடியாது” என்றார்.
Similar News
News July 7, 2025
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.
News July 7, 2025
நாம் இருவரும் சேரும் சமயம்…!

SJ சூர்யா இயக்கும் ‘கில்லர்’ பட இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார். நேற்றைய தினம், படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என SJ சூர்யா கேட்ட கேள்வி நெட்டிசன்களிடம் படுவைரலானது. அதற்கு இன்று காலை பதிலளிப்பதாகவும் SJ சூர்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ‘நாம் இருவரும் சேரும் சமயம்’ என ‘அன்பே ஆருயிரே’ படத்தில் வரும் பாட்டு வரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News July 7, 2025
பொய் சொல்கிறதா TNPSC? அன்புமணி சரமாரி கேள்வி

2024, ஜூலையில் 17,502 பேருக்கு பணி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு 8,618 பேரே தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அறிவிப்புக்கு முன்பு எழுதப்பட்ட தேர்வு முடிவுகளைக் கொண்டு 17,702 பேரை தேர்வு செய்துவிட்டோம் என்று TNPSC அறிக்கை விடுவதா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். TNPSC, திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.