News July 24, 2024
நான்காவது முனையமாகிறது பெரம்பூர்

சென்னையின் நான்காவது ரயில் முனையமாக பெரம்பூரை மாற்ற தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. வில்லிவாக்கத்தை நான்காவது முனையமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நிலங்களை கையகப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, பெரம்பூரை நான்காவது முனையமாக மாற்ற திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.
Similar News
News March 8, 2026
இராமநாதபுரம்: காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள்?

ராமநாதபுரத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், வரும் தேர்தலில் மாவட்டத்தில் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு MLA ராம.கருமாணிக்கம், மாநில செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருவாடானை தொகுதி ஏற்கனவே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு தொகுதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
News March 8, 2026
செல்வாக்கை இழந்ததால், ₹5000 கொடுத்த திமுக: EPS

அந்தியூரில் பிரசாரம் மேற்கொண்ட EPS, திமுக MLA-வின் ஹாஸ்பிடலில் ஏழைகளிடம் கிட்னி திருடப்பட்டதாக குற்றம் சாட்டினார். திமுகவினர் போதைப்பொருள் விற்பதால், சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கி, மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், மக்களிடம் செல்வாக்கை திமுக இழந்ததால் தான் ₹5000 வழங்கி இருப்பதாக விமர்சித்தார்.
News March 8, 2026
TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.


