News March 23, 2025
அம்பானிக்கு தலைவலியாய் அமைந்த Pepsi, Cocacola

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கேம்பா கோலாவை சமீபத்தில் சந்தைப்படுத்தியது. 200ML சர்க்கரை இல்லா கேம்பா ₹10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது Coca cola,pepsi நிறுவனங்களுக்கு சர்க்கரை இல்லாத 200ML பாட்டில்களை ₹10க்கு களமிறங்கியுள்ளனர். மிகப்பெரிய நிறுவனங்களான Coca Cola, Pepsi தற்போது அம்பானிக்கு பெரும் தலைவலியாய் மாறியுள்ளன.
Similar News
News December 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 542
▶குறள்:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
▶பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
News December 7, 2025
ஹிந்தி திணிப்பை ஏற்க கூடாது: அன்புமணி

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கிய UGC-க்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 3-வது மொழியாக அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதையும் கற்கலாம் என கூறினாலும், அது மறைமுக ஹிந்தித் திணிப்பு தான் என்றும் சாடியுள்ளார். இந்த உத்தரவை UGC திரும்ப பெற வலியுறுத்தியுள்ள அவர், TN-ல் இது அனுமதிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
News December 7, 2025
சச்சினின் சாதனையை முறியடித்த கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தொடர்நாயகன் (MOS) விருது வென்றவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். SA-வுக்கு எதிரான ODI தொடரில் 302 ரன்கள் குவித்த கோலிக்கு MOS வழங்கப்பட்டது. இது அவருக்கு 20-வது விருதாகும். சச்சின் 19 முறை MOS வென்றிருந்தார். அதேபோல, ODI-ல் அதிகமுறை MOS வென்றவர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவுடன் 2-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார். இருவரும் 11 முறை வென்றுள்ளனர்.


