News October 13, 2025
கடன் தொல்லை போக்கும் மிளகு தீபம்!

திங்கள் இரவில், 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டி, அதனை தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். செவ்வாய் காலை குளித்துவிட்டு, அந்த மூட்டையை பைரவர் சன்னதிக்கு எடுத்துச்சென்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். தொடர்ந்து 9 வாரம் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.
Similar News
News October 13, 2025
மத்திய அரசில் ₹55,000 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 474 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E, B.Tech, M.Sc (சில பாடப்பிரிவுகள் மட்டும்). வயது வரம்பு: 21 – 30. தேர்வு முறை: முதல்நிலை, முதன்மை தேர்வுகள், நேர்முக தேர்வு. சம்பளம்: ₹55,135 முதல். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.16. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News October 13, 2025
மக்களுக்காக உருவாகும் பாஜக தேர்தல் அறிக்கை: நயினார்

திமுக மக்களின் நன்மையை பார்க்காமல், பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆட்சி செய்வதாக நயினார் விமர்சித்துள்ளார். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை குறித்து சுற்றுப்பயணத்தின்போது மக்களிடம் எடுத்துரைப்பேன் என்றும் ஒவ்வொரு கிராமாக சென்று மக்களின் பிரச்னைகளை கேட்டறிய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும் கூறினார்.
News October 13, 2025
நாம் ஒற்றுமையோடு இருக்க அரசியலமைப்பே காரணம்: CJI

கடைசி குடிமகனுக்கும் விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நீதிமன்றங்கள் நிறைவேற்ற வேண்டும் என CJI BR கவாய் தெரிவித்துள்ளார். உள்நாட்டு பிரச்னை, நிலையற்ற தன்மையை எதிர்கொள்ளும் நம் அண்டை நாடுகளில் இருந்து நம்மை வேறுபடுத்திகாட்டுவது நமது அரசியலமைப்பு சட்டம் தான். போர், எமர்ஜென்சி, அமைதி காலங்களில் நாம் ஒற்றுமையோடு இருப்பதற்கு அதுவே முதன்மை காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.