News August 17, 2024
மக்கள் மருத்துவர் காலமானார்

“மக்கள் மருத்துவர்” என பெயர் பெற்ற நெல்லை, சிந்துபூந்துறையை சேர்ந்த டாக்டர் கணேசன் இன்று காலமானார். ஏழை எளிய மக்களுக்கு 30 வருடமாக ₹1-க்கு சிகிச்சை அளித்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக வெறும் ₹10 மட்டுமே கட்டணமாக வாங்கினார். இதனால், அவருக்கு அப்பகுதி மக்களே, மக்கள் மருத்துவர், 10 ரூபாய் மருத்துவர் என்று அடைமொழி கொடுத்தனர். அவரது மறைவு செய்தியை கேட்டு, துயரமடைந்த மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News August 22, 2025
பள்ளி மாணவர்களுக்கு ₹1,500.. இன்று முதல் ஆரம்பம்

2025 – 26 கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு வரும் அக்.11-ம் தேதி நடக்கிறது. அதற்கு தமிழகத்தில் உள்ள +1 படிக்கும் மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். <
News August 22, 2025
கப்பற்படையில் 1,266 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய கப்பற்படையில் ‘டிரேட்ஸ்மேன்’ பிரிவில் காலியாகவுள்ள 1,266 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷிப் பில்டிங் டிரேடு, இன்ஜின் டிரேடு, மெஷின் டிரேடு உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: +2. வயது வரம்பு: 18 – 25. தேர்வு முறை: எழுத்து & திறனறித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.2. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News August 22, 2025
சென்னை வயசு தெரியும்.. இந்த கட்டடங்களின் வயது தெரியும்?

அனைவருக்கும் பிடித்த சென்னை என்ற மெட்ராஸுக்கு இன்று 386 -வது ஹேப்பி பர்த்டே என்பதை அறிவோம். ஆனால், சென்னையின் புகழ் பெற்ற கட்டடங்களின் வயது நம்மில் பலருக்கும் தெரியாது. மெட்ராஸ் நகரம் உருவாகுவதற்கு முன்பே இதில் பல கட்டடங்கள் உருவாகிவிட்டன. அடுத்தடுத்த படங்களை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. இவற்றில் உங்களின் ஃபேவரிட் இடம் எது.. கமெண்ட் பண்ணுங்க?