News February 24, 2025
திமுகவுக்கு மக்கள் கெட்-ஆவுட் சொல்வார்கள்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள், போதை கலாசாரம் அதிகரித்துள்ளதாக டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியாக இருக்கும் எனவும், தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் மக்கள் ‘கெட்அவுட்’ சொல்வது நிச்சயம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 24, 2025
உடல் பருமன் பிரச்னை: 10 பேரை பரிந்துரைத்த PM

உடல் பருமன் பிரச்னை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆனந்த் மஹிந்திரா, உமர் அப்துல்லா, நடிகர்கள் மோகன்லால், மாதவன் உள்ளிட்ட 10 பேரின் பெயர்களை PM மோடி பரிந்துரைத்துள்ளார். உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். உடல் பருமன் குறைப்பு இயக்கம் பெரிதாக அவர்கள் ஒவ்வொருவரும் 10 பேரை பரிந்துரைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News February 24, 2025
டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியை நோக்கி புறப்பட்ட அமெரிக்க விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 199 பயணிகள், 15 சிப்பந்திகளுடன் நியூயார்க்கில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் விமானத்தில் குண்டு இருப்பதாக இமெயிலில் மிரட்டல் வந்தது. இதனால், இத்தாலியின் 2 போர் விமானங்கள் துணையுடன், ரோமில் விமானம் தரையிறக்கப்பட்டது. இறுதியில் அது வெறும் வதந்தி என தெரியவந்தது.
News February 24, 2025
செயற்கை சுவாசத்தில் போப் பிரான்சிஸ்!

கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சையில் உள்ள போப் பிரான்சிஸ் தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.