News March 18, 2024
திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய திமுக அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தின் நிலைமையை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 16, 2025
5 இடங்கள் பின்தங்கிய இந்தியா

உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், ஆசிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. சிங்கப்பூர், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. கடந்த ஆண்டில் இந்தியா 80-வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 85-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இந்த பட்டியலில் சீனா 64, பாகிஸ்தான் 103-வது இடங்களை பிடித்துள்ளன.
News October 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 490 ▶குறள்: கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. ▶பொருள்: காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.
News October 16, 2025
EPFO பணம் எடுப்பதில் மாற்றம்: வந்தது புதிய அறிவிப்பு

EPFO-ல் இருந்து பணம் எடுக்கும் நடைமுறையில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் வேலை இழந்த 12 மாதங்களுக்கு பிறகு தான், அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட முழுத்தொகையை எடுக்க முடியும். அதேபோல், வேலை இழந்த 36 மாதங்களுக்கு பிறகே முழு பென்சன் தொகையை கோர முடியும். முன்பு 2 மாதங்களில் முழுத்தொகை வழங்கப்பட்டது. தற்போது மினிமம் பேலன்ஸ் 25% நிறுத்தி வைக்கப்பட்டு, 75% மட்டுமே வழங்கப்படும்.