News March 28, 2024

I.N.D.I.A கூட்டணிக்கு மக்கள் துணை நிற்பார்கள்

image

மகாராஷ்டிராவில் I.N.D.I.A கூட்டணிக்கு மக்கள் துணை நிற்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளதாக சிவசேனா (உத்தவ் அணி) இளந்தலைவர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து பேசிய அவர், “மகாராஜ் சிவாஜிக்கு முன்னால் தலைவணங்கினோம். இனி என்ன நடந்தாலும் அவர் பார்த்துக் கொள்வார். துரோகிகளுக்கு நாங்கள் பாடம் புகட்டுவோம்” என்றார்.

Similar News

News January 23, 2026

வரலாறு படைத்த ‘Sinners’

image

மைக்கேல் பி. ஜோர்டான் நடிப்பில் ரியான் க்ளூகர் இயக்கிய ‘Sinners’ திரைப்படம், ஆஸ்கார் விருதுகளுக்கு 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது. இதற்குமுன்பு, All About Eve(1950), Titanic(1997), La La Land (2016) ஆகிய திரைப்படங்கள் தலா 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. ‘Sinners’ ​அந்த படங்களின் சாதனையை முறியடித்துள்ளது. இந்த திரைப்படம் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதை வென்றது.

News January 23, 2026

Sports 360°: பி.வி.சிந்து அபார சாதனை

image

*பேட்மிண்டன் வரலாற்றில் 500 வெற்றிகளை பதிவு செய்த முதல் IND வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார். *முதல் தர கிரிக்கெட்டில் ஜலஜ் சக்ஸேனா 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். *இங்கி.,க்கு எதிரான முதல் ODI-ல் 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி. *இந்தோனேஷிய பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் காலிறுதிக்கு தகுதி. *ரஞ்சி போட்டியில் ஒடிசாவுக்கு எதிராக TN முதல்நாள் முடிவில் 281 ரன்கள் எடுத்துள்ளது.

News January 23, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 589 ▶குறள்: ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். ▶பொருள்: ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.

error: Content is protected !!