News April 16, 2024
மோடியின் பகல் வேஷத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்

ராகுலின் உண்மையான அன்புக்கு முன்னால் மோடியின் பகல் வேஷத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். வட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வருகிறார். 100 முறை அவர் வந்தாலும், ராகுலின் ஒரு கூட்டத்துக்கு அது இணையாகாது என்ற அவர், தமிழக மக்களுக்கு உண்மையான அன்புக்கும், பொய் வேஷத்துக்கு நன்றாக வித்தியாசம் தெரியும் என்றும் கூறினார்.
Similar News
News April 29, 2025
டெல்லியில் அமித் ஷா ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று அமித் ஷா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இக்கூட்டத்தில், உள்துறை செயலாளர், BSF, CRPF, NSG அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். எல்லையில் 5 நாள்களாக பாகிஸ்தானுடனான பதற்றம் தொடரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
News April 29, 2025
ஆன்லைன் ரம்மிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு விதிகளை வகுத்திருந்தது. இதை எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. எழுத்துபூர்வமான வாதங்கள் முடிந்ததால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
₹800 கோடி.. தோனியின் வெற்றிக்கு காரணம் இவரே!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார். தோனியின் வெற்றிக்கு பின்னிருக்கும் பெண், மனைவி சாக்சி அல்ல, மாமியார் ஷீலா சிங். தோனியின் ₹800 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் சக்சஸுக்கு அவரே காரணம். தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் CEO-வான அவர், 4 ஆண்டுகளில் நிறுவனத்தை சிகரத்தில் ஏற்றியுள்ளார். கார்ப்பரேட் நுணுக்கங்களை கணவரிடம் கற்றுக்கொண்ட ஷீலா, சாதித்தும் காட்டியுள்ளார்.