News March 23, 2024

மக்கள் சின்னத்தை விட என்னைத்தான் தேடுவார்கள்

image

நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடவே கூடாது என சிலர் விரும்புவதாக சீமான் தெரிவித்துள்ளார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், ” மிகுந்த போராட்டத்துக்கு பிறகு எனக்கு மைக் சின்னத்தை கொடுத்துள்ளார்கள். ஏதாவது ஒன்றை தாருங்கள் என கேட்டும் அவர்கள் எங்களுக்கு சின்னம் தர விரும்பவில்லை. மக்கள் சின்னத்தை தேட மாட்டார்கள், என்னைத்தான் தேடுவார்கள், தேர்தல் முடிவில் இது புரியும்” என்றார்.

Similar News

News October 24, 2025

நெஞ்சு சளி நீங்க இந்த கசாயத்தை குடிங்க!

image

தேவை: கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம் *செய்முறை: வெந்நீரில் தலா 5 கற்பூரவள்ளி & துளசியை சேர்க்கவும். பின்னர், வெற்றிலையின் காம்போடு நரம்பை நீக்கிவிட்டு அதனுடன் சேர்க்கவும். அடுத்ததாக, மிளகு, இஞ்சி, சீரகத்தை இடித்து சேர்க்கவும். இவற்றை நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்து வடிகட்டி ஆறவைத்து குடிக்கலாம். இது நெஞ்சு சளியை விரட்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News October 24, 2025

கூட்டணிக்காக ADMK அலையவில்லை: செல்லூர் ராஜூ

image

கரூர் விவகாரத்தை பயன்படுத்தி தவெகவுடன் கூட்டணி வைக்க EPS முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டிய CM ஸ்டாலினுக்கு, செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், அதிமுக எந்த காலத்திலும் கூட்டணிக்காக அலைந்ததில்லை. எங்கள் கொள்கையோடு மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம். அதேநேரம் எங்கள் காதை கடித்தால், தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

News October 24, 2025

ஸ்ரீதேவி மகளுக்கு விரைவில் டும் டும் டும்மா?

image

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். அவருக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வைரலாகியுள்ளது. இன்ஸ்டாவில் Heart emoji-யுடன் ‘Save the date 29th October’ என குறிப்பிட்டு, ஜான்வி பதிவிட்டுள்ளார். இதை வைத்து அவருக்கு திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளிவருகின்றன. ஜான்வி, ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!