News April 30, 2024
மக்கள் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள்

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இபாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென, மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இந்த நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தால், அதனை நம்பி இருக்கும் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 20, 2025
தங்கம் விலை 2 மடங்காக அதிகரிக்கும்

கடந்த மூன்று நாள்களாக குறைந்து கொண்டே வந்த ஆபரணத் தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது 3,700 டாலராக இருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கம் 2 மடங்காக அதிகரிக்கும் என்று ஜெஃப்ரிஸ் என்ற அமெரிக்கா நிறுவனம் கணித்துள்ளது. அதாவது, சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 6,600 டாலர்களாக உயரக்கூடும் என தெரிவித்துள்ளது. இதனால், தங்கம் விலை இனி ஏற்றத்துடனே இருக்கும் என கூறப்படுகிறது.
News September 20, 2025
நயினார் மீது பாஜகவினர் அதிருப்தி?

பாஜகவில் மகன் பாலாஜிக்கு விளையாட்டு & திறன் மேம்பாட்டு அமைப்பாளர் பதவி வழங்கினார் நயினார். இதனால் வாரிசு அரசியலை எதிர்க்கும் பாஜகவினர் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், அடுத்த தலைவர் நான் தான் என்பதுபோல கறார் காட்டி வருகிறாராம் பாலாஜி. இதனால் கடுப்பான பாஜகவினர் நயினாரிடம் புகாரளிக்க, அவர் புகாரளிப்பவர்களையே கண்டிப்பதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமைக்கு இதுபற்றி ரிப்போர்ட் பறக்குமா?
News September 20, 2025
சைலெண்டான சந்தானம்!

‘Devil’s Double’ படம் சரியாக போகாததை தொடர்ந்து தற்போது சந்தானம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவலே இல்லை. வரிசையாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெறாத நிலையில், அடுத்த படம் குறித்த தேர்வில், அவர் மிகவும் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சந்தானம் சிம்புவுடன் நடிக்கிறார் எனக் கூறப்பட்ட நிலையில், அந்த படமும் அடுத்த கட்டத்தை எட்டவில்லை. Comeback கொடுங்க சந்தானம்!