News August 6, 2024
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவர்கள் கவனத்திற்கு!

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது ஆபத்து என ஆஸ்திரியாவின் டான்யூப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் அவர்கள் நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ரத்தத்தில் கலந்து பிபியை அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்துவந்தால் இதய பிரச்னைகளுடன், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 9, 2026
முன்னாள் மத்திய அமைச்சர் திமுகவில் இணைந்தார்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று(ஏப்.8) விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், பிரச்சார மேடையிலேயே முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இவர் முதலில் திமுகவில் மாவட்ட செயலாளராக இருந்து மதிமுகவுக்கு சென்றவர். பிறகு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது, மீண்டும் தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார்.
News April 9, 2026
உங்கள் ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் மூலிகை..

100 வயது வரை எந்த உடல்நலப் பிரச்னையுமின்றி வாழ இயற்கை கொடுத்த மருந்தே சீந்தில் மூலிகை. சீந்திலின் இலை & தண்டுகளை இரவில் ஊறவைத்து, காலையில் இதனை இடித்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றிய பின் வடிகட்டி அருந்தவும். இப்படி தினசரி செய்துவர, செரிமான பிரச்னை, சுகர், மஞ்சள் காமாலை என சகல நோய்களும் கட்டுப்படும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News April 9, 2026
புள்ளி, கமாவுக்காக வேட்புமனு நிராகரிப்பு: வேல்முருகன்

தவாக சார்பாக போட்டியிடும் 20 பேரின் வேட்புமனுக்கள், வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டதாக வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ECI-யிடம் அவர் புகாரளித்துள்ளார். குறிப்பாக, புள்ளி வைக்கவில்லை, கமா போடவில்லை என்று கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல என தெரிவித்தார். எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை 20 தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


