News November 16, 2024

திஷா பதானி தந்தையிடம் ரூ.25 லட்சத்தை சுருட்டிய நபர்கள்

image

ஓய்வு பெற்ற DSP’யான நடிகை திஷா பதானியின் தந்தை ஜகதீஷ் சிங் பதானியை 5 பேர் கும்பல், அரசு சார்ந்த ஆணையத்தில் பதவி ஆசை காட்டி ஏமாற்றியுள்ளது. ரூ.5 லட்சத்தை பணமாகவும், ரூ.20 லட்சத்தை வங்கி பரிவர்த்தனையாகவும் பெற்று ஏமாற்றி இருக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை உ.பி. கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைதாவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 1, 2026

தேர்தல் அறிக்கை எப்போது முதல்முறையாக வந்தது?

image

1931-ல் கராச்சி காங்., மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களை, 1937 தேர்தலில் காங்., தேர்தல் அறிக்கை வடிவில் முதல்முறையாக கொண்டுவந்தது. 1957 பேரவை தேர்தலின்போது ‘திராவிட நாடு’ என்ற தனிநாடு கோரிக்கையை தமிழக அரசியலில் முதல் தேர்தல் அறிக்கையாக திமுக முன்வைத்தது. 1967 தேர்தலில் தேர்தல் அறிக்கை (திமுக) முழு வடிவம் பெற்றது. அடுத்தடுத்து அதிமுக, பாமக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கின.

News March 1, 2026

ஈரானை தாக்க அமெரிக்காவுக்கு உதவிய AI!

image

ஈரான் மீதான தாக்குதலில் US ஆந்த்ரோபிக் கிளவுட் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிரிகளைக் கண்காணிக்கவும் போரில் இலக்குகளை சரியாக அடையாளம் காணவும் AI பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. போரில் அதன் AI பயன்படுத்த மறுத்ததால், US சமீபத்தில் ஆந்த்ரோபிக் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். இருப்பினும், அதன் AI முன்னதாகவே US பாதுகாப்பு அமைப்பில் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

News March 1, 2026

விஜய் – சங்கீதா விவாகரத்து.. குஷ்பு ரியாக்‌ஷன் இதுதான்!

image

மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனுவால், அரசியல் களத்தில் விஜய் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக பேசிய குஷ்பு, இதனை அரசியலாக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை என்றும், கணவன் – மனைவி இடையே உள்ள பிரச்னைகளை பேசுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!