News March 30, 2024
மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்

தேர்தல் ஆணையமே மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல தெரிகிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், “பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை தேர்தல் ஆணையம் உடனே வழங்குகிறது. எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் ஏற்கெனவே பயன்படுத்திய சின்னத்தைக் கூட கொடுக்க மறுக்கிறது. இதற்கெல்லாம் மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்” என்றார்.
Similar News
News March 22, 2026
நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிப்பு.. REWIND

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 14 மணி நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்ட தினமான 2020 மார்ச் 22-ம் தேதியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாள்கள் என தொடங்கிய முதற்கட்ட லாக்டவுன் பின்னர், பல கட்டங்களாக நீடித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 5,33,847 பேர் உயிரை காவு வாங்கியதோடு, பல கோடி பேரின் வாழ்வாதாரத்தையும் சீரழித்தது. லாக்டவுனில் உங்கள் நினைவு என்ன?
News March 22, 2026
CV சண்முகம் டெபாசிட் இழப்பது உறுதி: செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக அமோக வெற்றி பெறுவது உறுதி என செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். அறிவாலயத்தில் பேசிய அவர், பெண்கள் பற்றி கொச்சையாக பேசிவரும் CV சண்முகத்திற்கு தேர்தலில் என்ன பரிசு கிடைக்கும் என்பதை பார்ப்பீர்கள் என்றார். அவருடைய செயல்பாடுகள் மக்கள் விரோதமானவை என்றும், பர்கூரில் ஜெயலலிதா தோற்றதுபோல் CV சண்முகமும் டெபாசிட் இழப்பது உறுதி எனவும் பேசியுள்ளார்.
News March 22, 2026
கணவர்களுக்கும் கர்ப்பகால அறிகுறிகள் தோன்றும்

கர்ப்பிணிகளுக்கு வாந்தி, Mood Swings, தூக்கமின்மை & உடல் எடை அதிகரிப்பு ஆகியவை பொதுவானவை. ஆனால், கணவர்களுக்கும் இந்த அறிகுறிகள் தென்படும் என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? இதை Couvade Syndrome என டாக்டர்கள் சொல்கின்றனர். அதாவது, பார்ட்னருடன் ஏற்படும் வலுவான எமோஷனல் அட்டாச்மெண்ட் காரணமாக இது நிகழ்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர். உலகளவில் 20% ஆண்களிடம் இந்த அறிகுறிகளை உணர்வதாக கூறப்படுகிறது.


