News June 18, 2024
தங்கம் வாங்க தயங்கும் மக்கள்!

இந்தியாவில் தங்க நகைகளின் தேவை மந்தமாக இருப்பதாக, ICRA தர நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை தங்கம் 19% விலை உயர்ந்துள்ளதாக கூறும் பொருளாதார நிபுணர்கள், இதன் எதிரொலியாக பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்குவதை தள்ளிப்போடுவதாக தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விற்பனை மதிப்பு அடிப்படையில் 6-8% உயர்ந்தாலும், எடை அடிப்படையில் 4%ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 27, 2026
இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை.. HAPPY NEWS

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் இன்று முதல் +2 மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. உற்சாக மிகுதியில் இருக்கும் மாணவர்கள், கல்லூரி வாயிலில் அடியெடுத்து வைக்கவுள்ளனர். மாணவர்களே, இந்த விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, விருப்பமான கல்வியை தேர்ந்தெடுங்கள். உங்களின் எதிர்காலம் சிறக்க இன்றே அதற்கான பணிகளை தொடங்குங்கள். ALL THE BEST!

நயினார் தொகுதி மாற காரணம் இதுதானா?

நயினார் தொகுதி மாறப்போகிறார் என ஆரம்பம் முதலே தகவல் வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலில் சாத்தூர் தொகுதிக்கு நயினார் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், 1962-க்கு பிறகு நெல்லை தொகுதியில் ஒரு முறை ஜெயித்த யாரும் அடுத்த தேர்தலில் ஜெயித்ததாக சரித்திரம் இல்லையாம். இதனால்தான் 2021-ல் வென்ற நயினார் தற்போது தொகுதி மாறுகிறார் என்கின்றனர். <<-se>>#TNElection2026<<>>