News April 4, 2024
மக்கள் அடையாளம் காண வேண்டும்

இந்தியா தற்போது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டை உருவாக்குபவர்கள், நாட்டை அழிப்பவர்கள் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்பு உரிமைகளை காங்கிரஸ், INDIA கூட்டணி உறுதியாக செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 13, 2026
நெல்லை : சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

நெல்லை மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இனிமே நீங்க வக்கீல் பார்க்க அவசியமிலை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 13, 2026
விஜய்க்கு மீண்டும் அதிர்ச்சி.. சுடச்சுட தகவல்

டெல்லியில் CBI விசாரணையை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டார் விஜய். புஸ்ஸி ஆனந்த், நிர்மல், ஆதவ்விடம் 3 நாள்கள் CBI விசாரணை நடைபெற்ற நிலையில், விஜய் கேட்டுக் கொண்டதால், ஒரு நாளோடு விசாரணை முடிந்தது. இந்நிலையில், ஜன.19-ல் ஆஜராகும்படி விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னைக்கு வந்ததும் வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் உடனடி ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
News January 13, 2026
சபரிமலையில் நாளை மகரஜோதி!

சபரிமலை, மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பனை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகரவிளக்கை முன்னிட்டு, இன்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 45,000 ஆக குறைக்கப்பட்ட நிலையில், நாளை 30,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


