News April 7, 2024

விஜயகாந்திற்காக மக்கள் வருத்தப்படுகின்றனர்

image

விஜயகாந்தை முதல்வராக்காமல் விட்டுவிட்டோமே என மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள் என்று பிரேமலதா உருக்கமாக கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “கேப்டன் எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது லட்சியத்தை நிச்சயம் செயல்படுத்துவேன். தேமுதிகவை நன்றாக வழிநடத்தி அவர் கண்ட கனவை எட்டுவதற்கு உழைப்பேன்” என்றார்.

Similar News

News February 1, 2026

Perfume பயன்படுத்துறீங்களா? இந்த பிரச்னை வரும்.. ALERT!

image

Perfume-ஐ நேரடியாக சருமத்தில் அடிக்கிறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க மக்களே. Perfume-ல் சிறிதளவு ஆல்கஹாலும், நிறைய ரசாயனங்களும் கலந்திருக்கும். இது அனைவருக்கும் செட் ஆகாது. சில சமயங்களில் அலர்ஜியை ஏற்படுத்தலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே Perfume-ஐ ஆடைக்கு மேல் அடித்து பழகுங்கள். பெரும்பாலானோர் இந்த தவறை செய்கின்றனர். எனவே, விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE THIS.

News February 1, 2026

ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

image

ராணுவ நவீனமயமாக்கலுடன் இந்தாண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு மொத்தம் ₹7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்புத் துறைக்கு மத்திய அரசு அளிக்கும் முன்னுரிமையை பிரதிபலிக்கிறது. 2015-16 ஆம் ஆண்டில் ₹2.94 லட்சம் கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு மத்திய அரசு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

News February 1, 2026

வழக்கத்தை விட ஏமாற்றம் தந்த பட்ஜெட்: மு.க.ஸ்டாலின்

image

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட், வழக்கத்தை விட பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது என்று CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். TN நலன் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள், பெண்கள், விவசாயிகள், விளிம்பு நிலை மக்கள் என எந்த பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கிய திட்டங்கள் இடம்பெறவில்லை என சாடியுள்ளார். மேலும் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 41% ஆக தொடருவது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!