News March 2, 2025

மக்களே பிச்சை எடுக்காதீங்க: பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

image

மக்கள் கோரிக்கை மனுக்கள் தருவதை பிச்சை எடுப்பது என பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் படேல் கூறியது சர்ச்சையாகியுள்ளது. ம.பி.யில் நடந்த விழாவில் பேசிய அவர், அரசிடம் பிச்சை எடுக்கும் பழக்கம் மக்களிடம் உருவாகியுள்ளதாகவும், மேடையில் மாலை அணிவித்து, கையில் கடிதம் கொடுப்பதாகவும் சாடினார். இது நல்ல பழக்கம் இல்லை என கூறிய அவர், கேட்பதற்கு பதிலாக கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுமாறும் பேசியுள்ளார்.

Similar News

News March 12, 2026

மோடி ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை:ரகுபதி

image

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக PM மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் உள்பட விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் சாடியுள்ளார். மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே TN மீது PM-க்கு பாசம் வந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.

News March 12, 2026

3 சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. அதிரடி தீர்ப்பு

image

நெல்லை, மேலப்பாளையத்தில் 2023-ம் ஆண்டில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ கோர்ட், 40 வயதான குற்றவாளி ஆனந்த சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் 3 சிறுமிகளுக்கும் தலா ₹7 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

News March 12, 2026

ரஜினியை மிரட்டியது திமுக: ஆதவ் அர்ஜுனா

image

ரஜினி அரசியல் கட்சி தொடங்காததற்கு திமுகவே காரணம் என ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக விடுத்த மிரட்டலால் தான் ரஜினி மனவலிமை இழந்து பின்வாங்கியதாக குறிப்பிட்ட அவர், விஜய் திமுகவை எதிர்த்து நிற்கிறார் என்றால் அவருக்கு மன வலிமை அதிகம் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!