News May 16, 2024
அரண்மனையில் பிறந்தவர்கள் கடினமாக உழைக்க மாட்டார்கள்

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் அதற்கான காரணம் கூற INDIA கூட்டணித் தலைவர்கள் பலி ஆட்டைத் தேடுவார்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுக்குப் பின் INDIA கூட்டணி சுக்குநூறாக உடையும் என்றார். மேலும், அரண்மனையில் பிறந்த வாரிசுகள் கடினமாக உழைக்க மாட்டார்கள் என ராகுல், அகிலேஷை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
Similar News
News November 5, 2025
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும் என IMD கணித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் போது குடையை எடுத்துக் கொள்ளவும்.
News November 5, 2025
Sports Roundup: போதை பொருளுக்கு அடிமையான வீரர்

*தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ODI-ல் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. *ரஞ்சியில் தமிழகம் Vs விதர்பா ஆட்டம் டிராவில் முடிந்தது. *போதைப் பொருளுக்கு அடிமையான ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் அணியில் இருந்து நீக்கம். *பேட்மிண்டன் தரவரிசையில் உன்னதி ஹூடா 28-வது இடத்திற்கு முன்னேற்றம். *பிராங்க்ஃபர்ட் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் மானவ் சுதார் 2-வது சுற்றுக்கு தகுதி.
News November 5, 2025
தீராத பணப் பிரச்னை தீர வெற்றிலை தீப ரகசியம்!

மாலை 6 மணிக்கு, நிலை வாசலின் உள்பக்கத்தில், கிழக்கு பார்த்தவாறு ஒரு தட்டின் மேல் மஞ்சள் குங்குமம் தடவிய வெற்றிலையுடன், கொஞ்சம் கற்கண்டுகளை வைக்க வேண்டும். அதன் மேல், மண் அகலில் நெய் ஊற்றி, மஞ்சள் திரி போட்டு, விளக்கு ஏற்றி, ‘மகாலட்சுமி தாயே வருக வருக’ என 27 முறை சொல்லி வழிபட வேண்டும். இது கடன் பிரச்னை, பணப் பிரச்னைகளில் இருந்து விடுபட செய்யும் என நம்பப்படுகிறது. SHARE IT.


