News October 21, 2025
திறனற்ற திமுக அரசால் மக்கள் அவதி: எல்.முருகன்

திமுக அரசின் நிர்வாக திறன் இன்மையால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். விலைவாசி உயர்வு மக்களை பெருமளவு பாதித்துள்ளதாகவும், மறுபுறம் மத்திய அரசு மக்களின் நலனுக்காக GST வரிக்குறைப்பை கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் மக்கள் திமுகவை தூக்கி எறிய தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 21, 2026
EPS-க்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த TTV

ஜெயலலிதாவின் நல்லாட்சியை NDA கூட்டணி சார்பில் TN-ல் மீண்டும் அமைத்திட நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் TN-க்கு புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வரலாற்று வெற்றியை படைப்போம் என்றும், கூட்டணியில் இணைந்த அமமுகவை மனதார வரவேற்று வாழ்த்திய EPS-க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 21, 2026
பள்ளிகளுக்கு மீண்டும் 3 நாள்கள் விடுமுறை

பொங்கல் விடுமுறை முடிந்து இந்த வாரம் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன. இனி எப்போது விடுமுறை வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ். ஆம்! ஜன.24, 25 (சனி, ஞாயிறு) மற்றும் குடியரசு தினமான ஜன.26 எனத் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது. எனவே, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.
News January 21, 2026
மெடிக்கல் மிராக்கிள்: ஆண் வயிற்றில் கர்ப்பப் பை!

ம.பி.,யில் இயங்கி வரும் பிரபல தனியார் ஸ்கேன் மையத்தில் 47 வயது ஆண் ஒருவர், அடிவயிறு வலியால் ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவருக்கு கருப்பை வளர்வதாக முடிவுகள் வந்ததை பார்த்து ஆடிப்போயுள்ளார். இதையடுத்து, ஒரு ஆணுக்கு எப்படி கருப்பை வளரும் என அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், சுகாதாரத்துறையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


